Skip to main content

முன்னாள் எம்.எல்.ஏவை கைது செய்ய பயந்த போலிஸ்... ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்க்காக திமுக, அதிமுக, அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரும் தேர்தல் வேலை பார்த்தனர். திமுக வேட்பாளர் வீட்டில் ரெய்டு செய்ததை போல அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வீட்டில், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ரெய்டு நடத்தவில்லை, இந்த தொகுதியில் மட்டும்மல்ல தமிழகத்திலேயே அதிக செலவு செய்யும் வேட்பாளராக அவர் தான் உள்ளார் என்பது குற்றச்சாட்டாக இருந்தது.

 

 police fear to arrest Former MLA... The court granted bail

 

இந்நிலையில், ஏப்ரல் 15ந்தேதி ஒரு வீடியோ சமூக வளைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான அதிமுகவை சேர்ந்த சம்பத்குமார், ஒரு மரத்தின் கீழ் தனது கட்சி நிர்வாகிகள், பாமகவினரை அழைத்து, ஏ.சி.சண்முகம் சார்பாக ஓட்டுக்கு நாம் பணம் தரவேண்டும், அதற்கு ஒரு டீம் ரெடியாக இருக்க வேண்டும். பணம் தரும் குழுவோடு ஏ.சி.சண்முகம் ஆள் ஒருவர் வருவார். அவரை வைத்துக்கொண்டு தான் தரவேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்துக்கொண்டுயிருந்தார். இது பெரும் சர்ச்சையானது.

 

 police fear to arrest Former MLA... The court granted bail

 

மேற்கண்ட வீடியோ வெளியான நிலையில் ஏப்ரல் 16ந்தேதி வேலூர் பாராளுமன்ற தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த வீடியோ பதிவு மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது என்கிற கேள்வி பல்வேறு தரப்பில் இருந்து வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரை நோக்கி எழுப்பப்பட்டது. அதனால் அவர் உத்தரவுப்படி வாணியம்பாடி உதவி தேர்தல் அலுவலர் சார்பில், வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது.

 

 

அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கைது செய்யாமல் ஆளும்கட்சி முன்னாள்  எம்.எல்.ஏ என்பதால் பயந்து பதுங்கியது காவல்துறை. எப்.ஐ.ஆர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்த வழக்கில் இன்று ஏப்ரல் 24ந்தேதி வாணியம்பாடி உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜரானார் சம்பத்குமார். மாலை வரச்சொன்னார் நீதிபதி. அதன்படி இன்று மாலை அந்த வழக்கில் சம்பத்குமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு முறைகேடு; திமுக போராட்டம் ஒத்திவைப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
NEET examination malpractice DMK struggle postponed

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து ஜூன் 24 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; இருவர் கைது

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Prohibited lottery sales; Two arrested

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஈரோடு தாலுகா போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னிமலை, ரோடு, கே.கே. நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள துணி சலவை செய்யும் கடையின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் இருவரும் காசி பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (38), பூவரசன் (27) என்பது தெரியவந்தது.மேலும், விசாரணையில், அவர்கள் இருவரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் 10, 2 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.