Skip to main content

திருடுபோன நகையைக் கண்டுபிடிக்காத காவல்துறை... பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்! 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

The police did not find the stolen jewelry... the family was involved in a dharna with the public!

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது கணவர் சின்னதுரை அரசு அதிகாரியாகப் பணிபுரிந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

 

இந்நிலையில், தனலட்சுமி தனது மூன்று மகள் மற்றும் மகனுடன் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்துவிட்ட நிலையில், மூன்றாவது மகள் ஜெயலட்சுமியின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 110 பவுன் சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்க பணத்தை கடந்த மார்ச் மாதம் 10- ஆம் தேதி பட்டப் பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

 

இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையிடம் புகார் அளித்தும் கடந்த ஆறு மாத காலமாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அக்கிராம மக்கள் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தின் நுழைவாயில் முன்பு அமர்ந்து காவல்துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதுகுறித்து அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கிராமப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய வீடுகளில் 110 பவுன் சவரன் தங்க நகை இருக்காது என காவல்துறை அதிகாரிகள் ஏளனமாக நினைப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறை தனிப்படை அமைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற நகைகளை மீட்டு தராவிட்டால், குடும்பத்துடன் விருத்தாச்சலம் காவல் நிலையம் முன்பு தீக்குளிப்போம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாலி கட்டிக்கொள்ளும் நேரத்தில் 12 பவுன் நகை, பணம் திருட்டு; கோவிலில் பரபரப்பு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

12-pound jewel was stolen during a wedding held in the temple

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி. இவருடைய மகளுக்கும் மந்தார குப்பத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நெய்வேலியில் நேற்று வேலுடையான்பட்டு கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நெய்வேலி மந்தார குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். 

 

ஞாயிறு காலை கோவிலுக்கு மணமகள் தாலி கட்டிக்கொள்ளச் சென்றபோது மணமகள் அணிந்திருந்த 12 பவுன் நகை, ரூ. 12 ஆயிரத்தை அவரது அறையில் வைத்துப் பூட்டிவிட்டு கோவிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் திருமணம் முடிந்து வந்து பார்த்தபோது மணமகள் அறைக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அவர் வைத்திருந்த நகை மற்றும் பணம் காணாமல் போயிருந்தது. இதனைப்   பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 

தாலி கட்டிக்கொள்ளச் சென்ற நேரத்தில் மணமகளின் நகை மற்றும் பணம் திருடுபோன சம்பவம் திருமண மண்டபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது‌. இது குறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

ரூ. 100 கோடிக்கும் மேல் மோசடி; பிரபல நகைக் கடை முற்றுகை  

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

famous jewelry store is under siege for fraud of more than rs 100 crores

 

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு,  நாகர்கோயில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரபல ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தை பார்த்த பலரும் முதலில் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு  செய்ததாக கூறப்படுகிறது.      

 

ஆனால் கடந்த இரண்டு மாதமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்தது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.  இதனிடையே திருச்சி கடை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள்  திருச்சி,  கரூர் பைபாஸ் சாலையில் செயல்படும் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.    

 

இது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தியதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் சுமார் 100 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் குமுறுகின்றனர்.