Skip to main content

இளம்பெண் கொலை வழக்கு; இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Police caught youth in case of case of young woman

சென்னையிலிருந்து ரமேஷ் மற்றும் அவரது காதலி பவித்ராஸ்ரீ இருவரும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் அருகே உள்ள கோனேரி குப்பம் பகுதியில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வழி மறித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்ட மர்ம கும்பல் ரமேஷின் காதலி பவித்ராஸ்ரீயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

இதையடுத்து மர்ம நபர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய பவித்ராஸ்ரீ அந்த வழியாக வந்த கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஒலக்கூர் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான் திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், அந்த மர்ம நபர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில்,  திருநெல்வேலி மாவட்டம் கோழியன் குளம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சந்திர பெருமாள் என்பவரது மகன் 24 வயது உதய பிரகாஷ், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் தங்கள் சொந்த வேலை காரணமாக சென்னை சென்றிருந்தனர். சம்பவம் நடந்த அன்று சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கோனேரி குப்பம் அருகே ரமேஷ் அவரது காதலி பவித்ராஸ்ரீயும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்ததை நோட்டமிட்டு அவர்களை வழிமறித்து தாக்கி அவர்களிடமிருந்து செல்போனை பறித்துள்ளனர். ஆனால் பவித்ராஸ்ரீ தனது செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். பின்பு அவரிடம் செல்போனை பறித்து வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து சென்றபோது காரில் அடிப்பட்டு பவித்ராஸ்ரீ உயிரிழந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரிடமும் பறிக்கப்பட்ட செல்போனகள் குறித்து விசாரித்தபோது, விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். அதனைப் பறிமுதல் செய்வதற்காக இருவரையும் அழைத்துக்கொண்டு காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன், ஏட்டு தீபன் மற்றும் காவலர்கள் சென்றுள்ளனர். அங்கு செல்போனை எடுத்துக் கொடுத்த உதயபிரகாஷ் செல்போனுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் ஏட்டு தீபன் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி உதவி ஆய்வாளர் ஐயப்பன், உதயபிரகாஷின் வலது காலில் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். உடனே சரிந்து விழுந்த அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்கப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு தீபன் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கோவையில் திமுகவினர் மீது பாஜகவினர் தாக்குதல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
BJP DMK issue in Coimbatore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் கோவை மாவட்டம் சிங்காநல்லுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளைம் 28வது வார்டு பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நேற்று (11.04.2024) இரவு 10.40 மணியளவில் பாஜகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட திமுகவினரை பாஜகவினர் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கூறுகையில், “கோவையில் இதுவரை போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் இது போன்று சட்டவிதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதில்லை. திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கிய பாஜகவைச் சார்ந்த ஆனந்தகுமார், மாசானி உள்ளிட்டோர் மீது 294 பி, 323, 147 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.