Point signal failure...trains stopped...passengers suffer

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு- மோசூர் இடையிலான ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட பாயிண்டு சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் வழித்தடத்தில் வரும் விரைவு மற்றும் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பாயிண்டு சிக்னல் கோளாறு காரணமாகசுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிக்னல் கோளாறை சரிசெய்த நிலையில் ரயில் சேவைகள் துவங்கியது. காலை வேளையில் 40 நிமிடங்களுக்கு மேலாக புறநகர் ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால் கல்லூரி மற்றும் பணியிடங்களுக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். அடிக்கடி திருவாலங்காடு அருகே ஏற்படும் சிக்னல் கோளாறால் இதுபோன்று பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.