
திருப்பத்தூரில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த புகாரில் இளைஞர் ஒருவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அச்சத்தில் இளைஞர்தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ளது டி.எல் காலனி. தோல் தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில் வசித்து வந்தவர் திருநாவுக்கரசு. அதேபகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த திருநாவுக்கரசுஅந்தப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 14 ஆம் தேதி அச்சிறுமியை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் தங்களது பெண்ணை கடத்தி திருமணம் செய்துகொண்டதாகத் திருநாவுக்கரசு மீது புகார் கொடுத்துள்ளனர். இதன்காரணமாக திருநாவுக்கரசு மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தன்மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த இளைஞர் திருநாவுக்கரசு பெட்ரோல் கேனுடன் சென்று வீட்டுக்கு அருகில் தீவைத்து தற்கொலை செய்ய முயன்றார். அப்பொழுது அக்கம்பக்கத்தினர் தீயில் எரிந்துகொண்டிருந்த இளைஞரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்பொழுது திருநாவுக்கரசு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)