Skip to main content

"நாளை நான் சென்னையில் இருப்பேன்!" - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

pm narendra modi tweet

 

'நாளை நான் சென்னையில் இருப்பேன்' என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

 

டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை (14/02/2021) காலை 11.15 மணியளவில் சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், ரூபாய் 3,770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் பகுதி- 1 விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து, வண்ணாரப்பேட்டையில் இருந்து, விம்கோ நகர் வரையிலான பயணிகள் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, நாளை (14/02/2021) மதியம் சென்னையில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி செல்கிறார். 

pm narendra modi tweet

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

பிரதமரின் சென்னை வருகையையொட்டி, சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சென்னைதான் முன்மாதிரி என்ற நிலையை எய்துவதே இலக்கு” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 03/08/2023 | Edited on 04/08/2023

 

The goal is to make Chennai a role model Chief Minister M.K.Stalin

 

சென்னைதான் முன்மாதிரி என்ற நிலையை எய்துவதே நம் இலக்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் போரூர் ஏரியில் புதிய ​மதகு​ அமைத்தல் மற்றும்​ போரூர் ஏரி முதல் இராமாபுரம் ஓடை வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அசோக் நகர் 4 ஆவது நிழற்சாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த ஆய்வுப் பணி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆட்சிக்கு வந்தபோதே கொரோனா என்ற பெருந்தொற்றை எதிர்கொண்டு கட்டுப்படுத்தினோம். தொடர்ந்து, அனைத்துத் துறைகளையும் முடுக்கி விட்டு, சென்னை முழுவதும் மழைநீர் வடிகால்களை ஆலோசனைக் குழுவின் துணையோடு ஆய்வின் அடிப்படையில் அமைத்தோம். அதன் பயனைக் கடந்த பருவமழைக் காலங்களில் கண்கூடாகப் பார்த்தோம். சிறுமழைக்கே நீர் தேங்கிய பகுதிகளில், தற்போது பெருமழை பெய்தாலும் சில மணி நேரங்களில் மழைநீர் வடிவதை மக்களும் ஊடகங்களும் எடுத்துரைத்தனர்.

 

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் எஞ்சியுள்ள பகுதிகளிலும் இன்று ஆய்வு மேற்கொண்டேன். இந்தியப் பெருநகரங்கள் அனைத்துக்கும் வெள்ளத்தடுப்பு மேலாண்மையில் சென்னைதான் முன்மாதிரி என்ற நிலையை எய்துவதே நம் இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

முதல்வர் குறிப்பிட்டு பதிவிட்ட டுவீட் நீக்கப்பட்ட விவகாரம்; ராணுவம் விளக்கம்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

The matter of the deleted tweet posted by the Chief Minister  Army Description

 

கன்னியகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா என்பவர் இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக சமீபத்தில் பதவி உயர்வு பெற்றார். தமிழகத்தில் இருந்து மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா ஆவார். இந்த செய்தியை இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு டுவிட்டரில் நேற்று பகிர்ந்து இருந்தனர்.

 

இந்த டுவீட்டை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டை தெரிவித்திருந்தார். இதையடுத்து திடீரென வட கிழக்கு ராணுவம் அந்த பதிவை நீக்கியது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து சென்னை மண்டல பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர், ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்.

 

இந்நிலையில் வடகிழக்கு ராணுவம் தற்போது அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டில் இருந்து தேர்வான முதல் பெண் ராணுவ ஜெனரலை வாழ்த்துகிறோம்.  ராணுவ அதிகாரிகள் தலைமையகத்துக்கு முன்பே வடக்கு கமாண்ட் பதிவிட்டதால் தான் அந்த குறிப்பிட்ட டுவீட் நீக்கப்பட்டது” என தெரிவித்துள்ளது. முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில், “தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை வடக்கு மண்டல ராணுவ பிரிவு ஏன் நீக்க வேண்டும். இதன் பின்னணி என்ன” என கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.