![Plastic Eradication Awareness Campaign at Weekly Vegetable Market](http://image.nakkheeran.in/cdn/farfuture/I6J5tJ0DXN32lCkz8zRTijNqLRN13UszCw1Rpc995l4/1638419464/sites/default/files/inline-images/plastic-awareness.jpg)
உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் நேற்று (01.12.2021) மாலை உளுந்தூர்பேட்டை காய்கறி வார சந்தையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் இரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர்கள் வின்சென்ட், திலீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பொருளாளர் முருகன் வரவேற்றார்.
மாவட்ட சிறப்புத் திட்டத் தலைவர் அன்பழகன், வெங்கடாஜலபதி, முத்துக்குமாரசாமி, மூத்த உறுப்பினர் ரவி பேரூராட்சி மேற்பார்வையாளர்கள் தமிழ்மணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காய்கறி வாரச் சந்தையில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கிவந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், அவர்களுக்குத் துணிப்பை வழங்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது.