Skip to main content

பிதாமகன் திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

Pitamagan film producer V. Ethurai passed away

 

சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை இன்று காலமானார்.

 

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை (69). இவர் விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன், விஜயகாந்தின் கஜேந்திரா, என்னம்மா கண்ணு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வி.ஏ.துரை, அண்மையில், தான் வறுமையில் வாடி வருவதாகவும் மருத்துவ தேவைக்காக தனக்கு உதவி செய்ய வேண்டும் என திரைத்துறையினர்களுக்கும், நடிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், சூர்யா, கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் அவருடைய சிகிச்சைக்காக உதவி புரிந்திருந்தனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த வி.ஏ.துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

''த்ரிஷாவிடம் நான் மன்னிப்பே கேட்கவில்லை'' - ரிவர்ஸ் கியர் போட்ட மன்சூர் அலிகான்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

அண்மையில் நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ காட்சி ஒன்று வைரலானது. இதற்கு த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

 

நடிகையும், பாஜகவின் பொறுப்பாளர்களில் ஒருவரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான மன்சூர் அலிகான் இது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

 

அதற்கு அடுத்த நாளே திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக நடிகர் மன்சூர் அலிகான் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் 'தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வ குணம்' என பதிவிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் மன்சூர் அலிகானிடம் பிரச்சனை தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்டபிறகும் பலர் மீது மான நஷ்டஈடு வழக்கு போட்டுள்ளீர்களே காரணம் என்ன என்ற கேள்விக்கு, ''நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை. என்னுடைய பி.ஆர்.ஓ வை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'அடக்க நினைத்தால் அடங்க மறு; திரை கதாநாயகி த்ரிஷாவே என்னை மரணித்துவிடு' என்றுதான் சொன்னேன். ஆனால் அவர் மன்னித்துவிடு எனப் புரிந்து கொண்டு வெளியிட்டு விட்டார். அந்த நேரத்தில் மீண்டும் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்து விட்டேன். நான் சொன்னது இதுதான். இந்த அதிர்ச்சியில் இருந்து நானே இன்னும் வெளிவரவில்லை'' என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'உயர்வாகத்தான் பேசினேன்'-நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம்  

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

actor Mansoor Ali Khan explains

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இதனிடையே, இப்படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இதற்கு நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னை பற்றி கேவலமாக பேசிய ஒரு வீடியோ எனது கவனத்திற்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும், இது பாலியல் அவமரியாதை, பெண்வெறுப்பு மற்றும் அவரது மோசமான மனநிலையை நான் காண்கிறேன். அவருடன் அந்த படத்தில் சேர்ந்து நடிக்காததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இனிமேலும், இது போன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இவர் போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் குரல்கள் எழுந்து வருகிறது. நடிகை குஷ்பு ஆகியோர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷாவை பற்றி உயர்வாகத்தான் பேசினேன் என நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில் 'நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர். நடிகை திரிஷாவை பற்றி உயர்வாகத்தான் பேசினேன்' என தெரிவித்துள்ளார்.

 

விரிவான அலசல் கட்டுரைகள்