Skip to main content

ரெம்டெசிவிர் மருந்தை திருடி விற்றவர் கைது!  

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Pharmacist  for stealing Remtacivir and selling it for Rs 36,000

 

தமிழகத்தில் இரண்டாம் அலை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை வெளியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர பரிந்துரைக்கின்றனர். ஒரு டோஸ் ரெம்டெசிவிர் 1,500 ரூபாய் என இருக்கும் நிலையில் கள்ளச் சந்தையில் அதன் விலை பல்லாயிரக்கணக்கில் கூடி உள்ளது. இதனால் ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

 

Pharmacist  for stealing Remtacivir and selling it for Rs 36,000

 

தேவையைச் சாதகமாக்கி ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்கும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புரசைவாக்கத்தில் மெடிக்கலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை திருடி 36,000 ரூபாய்க்கு விற்ற மருந்தாளுனர் கைது செய்யப்பட்டுள்ளார். புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தக மேலாளர், ரெம்டெசிவிர் மருந்து இருப்பு குறித்து சரிபார்த்த பொழுது 6 ரெம்டெசிவிர் மருந்துகள் காணாமல் போயிருந்தது. இதுதொடர்பாக அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே மருந்தகத்தில் கடந்த 7 மாதமாக அங்கு மருந்தாளுனராகப் பணியாற்றிய ஜெயசூர்யா என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

 

இதுகுறித்த புகாரில் மருந்தாளுனர் ஜெயசூர்யா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் 6 குப்பி ரெம்டெசிவிர் மருந்தை ஒரு குப்பி 6 ஆயிரம் என்ற விலையில் மொத்தம் 36 ஆயிரத்திற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஸ்டாலின் தாமஸ் என்பவருக்கு விற்றது தெரியவந்தது. சென்னையில் மட்டும் இதுவரை 15 பேர் இதுபோல் ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'எனக்கு என்ன ஆசையா இப்படி நடக்க வேண்டும் என்று...' - விமர்சனத்திற்குப் பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tamilachi Thangapandian responded to the criticism

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும்,  நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி என்ற பேராசிரியரும், அதிமுக சார்பில் ஜெயவர்தனும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், அண்மையாகவே கையில் ஸ்டிக் உடன் காலில் பேண்டேஜ் அணிந்தபடி தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட நிலையில், செய்தியாளர்கள் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

சமூக வலைத்தளங்களில் நீங்கள் கையில் வாக்கிங் ஸ்டிக் உடன் வருவது குறித்து விமர்சனங்கள் வைக்கிறார்கள். இதற்கு உங்கள் கருத்து என்ன எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''என்ன விமர்சனம் வைக்கிறார்கள். ஸ்டிக்குடன் நடக்க வேண்டும் என எனக்கு என்ன ஆசையா? உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. ஸ்டிக்கோடு நடப்பதற்கு யாராவது ஆசைப்படுவாங்களா? இது மிக மிக முக்கியமான தருணம். இந்த நேரத்தில் நான் நடக்கக்கூடாது ஓட வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில் யாராவது ஸ்டிக்குடன் நடக்க வேண்டும் என அவசியம் இருக்கா? எனக்கு மம்தா பானர்ஜி மீதும் அவருடைய கொள்கை மீதும் மிகப்பெரிய மரியாதை உண்டு. இந்த மாதிரியான விமர்சனங்கள் வைப்பவர்களுக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.