
கரூரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வினோதமான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நீரஜ்’ என்ற பெயர் கொண்டவர்களுக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர், சுங்க கேட் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில், ‘நீரஜ்’ என்ற பெயர் உள்ளவர்கள் தங்கள் பெட்ரோல் பங்க்கிற்கு வந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும், ஆதார் அட்டை கொண்டு வர வேண்டுமெனவும் அறிவித்துள்ளனர். மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.