!["Petrol and diesel prices likely to rise further" - Indian Oil Corporation Chairman interview!](http://image.nakkheeran.in/cdn/farfuture/3U_KoA4FUobkTx_wL0cyfubIFbghxKQ9PNJzKSSzCz8/1634410474/sites/default/files/inline-images/iopp33.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று (16/10/2021) இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வைத்யா, "சர்வதேச அளவில் கரோனா பாதிப்பின் தாக்கம் மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், சர்வதேச டாலர் மதிப்பில் சர்வதேச கச்சா எண்ணெயின் விலை ஒரே சீராக இல்லாமல் மாறி மாறி வருவதன் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் உயர வாய்ப்பு உள்ளது.
மேலும், இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து சகஜ நிலைக்கு வெகுவாக திரும்புவதால் பெட்ரோல், டீசல், தேவையும் அதிகமாக இருக்கிறது. முன்பைவிட பொதுமக்கள் அதிக அளவில் பெட்ரோல், டீசல் பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாகவும் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் சிலிண்டர் விலையும் இதே காரணத்தினால் உயர்ந்து காணப்படுகிறது" எனத் தெரிவித்தார்.