



Published on 14/07/2021 | Edited on 14/07/2021
பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. தமிழ்நாட்டிலும் எரிபொருளின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்துவருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்தவகையில் நேற்று (13.04.2021) அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தைத் திறந்திட வலியுறுத்தியும் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் சத்தியசீலன் தலைமையில் உயர் நீதிமன்ற ஆவின் கேட் வழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.