Skip to main content

ஆன்லைன் மூலம் வெடிமருந்துகளை வாங்கிய நபர்; கோவை சம்பவத்தின் தொடர்ச்சியா? என்.ஐ.ஏ. விசாரணை

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

A person who purchased explosives online; NIA investigation whether it is a continuation of the Coimbatore incident

 

கோவையில் ஆன்லைனில் வெடிமருந்துகளுக்குத் தேவையான வேதிப்பொருட்களை வாங்கியதாக கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

 

விசாரணையில், கோவில்பட்டியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் மீதான கொலைமுயற்சிக்கு இந்த வெடிபொருட்களை வாங்கியது தெரியவந்தது. இருப்பினும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவ்விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால், முன்விரோதம் காரணமாக கொலைமுயற்சிக்காகத் தான் இந்த வெடிபொருட்கள் வாங்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கு குறித்தான அடுத்தகட்ட விசாரணையை கோவை மாநகரக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

 

கோவை மாநகரக் காவல்துறைக்கு இவ்விசாரணை மாற்றப்பட்ட பின் சரவணம்பட்டியில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்திலும் கர்நாடகாவின் மங்களூர் பகுதியிலும் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக இணையம் வழியாக வெடிமருந்துகளுக்குரிய வேதிப்பொருட்களை வாங்குபவர்கள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் தான் மாரியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்