person who published  personal photos of the young woman on the website was arrested

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கெண்டையனஅள்ளியைச் சேர்ந்தவர் இன்பசேகரன் (55). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திருமணம் ஆகாத இவர், அதே பகுதியில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் இளம்பெண் ஒருவருடன் நெருங்கிப் பழகினார். நெருக்கம் அதிகரிக்கவே, திருமணத்தை மீறீய உறவாக மாறியுள்ளது.

Advertisment

அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தபோது, அதை இன்பசேகரன் தன்னுடைய அலைபேசியில் படம் எடுத்துள்ளார். திடீரென்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அந்த இளம்பெண் அவரை விட்டுப் பிரிந்து விட்டார்.

Advertisment

இதனால் ஆத்திரம் அடைந்த இன்பசேகரன், தன்னுடன் இளம்பெண் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாசமான படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதையறிந்த அந்தப் பெண், மாரண்டஅள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இன்பசேகரனை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இளம்பெண்ணின் ஆபாசப்படங்களை வெளியிட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் இன்பசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான கைது ஆணை நகல், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்பசேகரனிடம் வழங்கப்பட்டது.

Advertisment