Skip to main content

'இந்தியா கூட்டணியே ஆட்சியமைக்க மக்கள் விரும்புகின்றனர்' - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி!

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
'People want India coalition to form the government' - Minister I. Periyasamy interview

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை விட 4 லட்சத்து 43 ஆயிரத்து 821  வாக்குகள்   கூடுதலாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி ஆகியோர். முன்னிலையில் வாங்கினார்.

அதன்பின் அமைச்சர்.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, ''இந்தியா கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். ஆகையால் இந்தியா கூட்டணி கண்டிப்பாக அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேறும். மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆகையால் இந்தியா கூட்டணி  அவசியம் ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது, மக்கள் விரும்புகின்றனர். ஆகவே இந்தியா கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்''என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“உலக அளவில் முதல்வரின் காலை உணவுத்  திட்டம் பாராட்டப்பட்டு வருகிறது” - அமைச்சர் ஐ.பெரியசாமி  

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
breakfast program is being appreciated globally says Minister I. Periyasamy

தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும்,  முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டு முதல் 30,122  பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை  பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு இன்று வரை  சிறப்பாக  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் 17 லட்சம்  மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள். 

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளும்  இந்த திட்டத்தை தங்கள் பள்ளிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக  முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழக முதல்வர்  பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் அன்று அரசு உதவி பெறும்  தனியார் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டு திருவள்ளுவர்  மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி  பெறும் தனியார் பள்ளியான புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தை  தொடங்கி வைத்தார்.   

breakfast program is being appreciated globally says Minister I. Periyasamy

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைச்சர்கள்  சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள  அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.  இதன்மூலம் 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,23,536 மாணவ- மாணவியர்கள் பயன் பெறுகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட  ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ஒன்றிய பெருந்தலைவர்  மகேஸ்வரிமுருகேசன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பாறைப்பட்டி  ராமன், காந்திகிராமம் அறக்கட்;டளை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் தங்கமுனியம்மாள்  வரவேற்றார். நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர்  தூவி அஞ்சலி செலுத்தினார். 

அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டியை  அமைச்சர் ஐ.பெரியசாமி பரிமாறினார். அதன்பிறகு பேசிய அவர், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது  தமிழகத்தில் யாரும் வெறும் வயிற்றுடன் படுக்க கூடாது என்ற நல்ல  எண்ணத்தில் ஒருகிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்ற திட்டத்தை அறிவித்து  அதன்மூலம் தமிழக மக்களின் வயிற்று பசியை போக்கினார். அவருடைய வழியில் வந்த  தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெறும் வயிற்றுடன் கல்வியை கற்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கி காலை  சிற்றுண்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதோடும் இன்று அரசு உதவி  பெறும் தனியார் பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். 

breakfast program is being appreciated globally says Minister I. Periyasamy

உலக  அளவில் இந்தத் திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவர்கள் வயிற்றுப்பசி இல்லாமல்  நன்றாக படிக்கும் நிலைமை உருவாகி உயர்க்கல்வி கற்கும் அளவிற்கு மாணவர்கள் கல்வித்தரம் உயரும் என்றார். தமிழகத்தில் அனைவரின் நலன்  காக்கும் முதல்வராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கொடுத்த வாக்குறுதிகள்  அனைத்தையும் நிறைவேற்றி வருவதோடு கடைக்கோடி மக்கள் வரை திட்டம்  செயல்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்” என்று கூறினார். அதன்பின் விழாவில் காந்திகிராமம் ஊராட்சியைச் சேர்ந்த 16 பேருக்கு  கலைஞரின் கனவு இல்லத்திட்டம் மூலம் வீடுகள் கட்டுவதற்கான ஆணையையும், ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம் மூலம் 5 பேருக்கு ஆணையையும் வழங்கினார்.

Next Story

‘லட்சக்கணக்கான வீடுகள் கட்டித் தர இருக்கிறோம்’ - அமைச்சர் சக்கரபாணி!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
We are going to build lakhs of houses Minister Chakrapani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,, தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டியிருக்கிறார். அந்த வகையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் ஏற்கனவே பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் தருமபுரியில் தொடங்கி வைத்துள்ளார். 

We are going to build lakhs of houses Minister Chakrapani

தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரியில் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் 388 ஒன்றியங்களில் உள்ள 12,525 ஊராட்சிகளில் ஒவ்வொரு பகுதிகளிலும் 5 ஊராட்சிகளை இணைத்து அல்லது 20 ஆயிரம் மக்கள் தொகை கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்டம் வழங்க இருக்கிறார். அந்த வகையில் இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி வட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, புளியம்பட்டி, கொங்கமுத்தூர், தொப்பம்பட்டி, வேலம்பட்டி, தும்மலப்பட்டி ஆகிய 6 ஊராடசிகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் மனுக்களைப் பெற்று, அதற்கு தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியினை நடத்தி வருகிறரர். எனவே முதலமைச்சர ஆட்சி பொறுப்பேற்ற பின்பு குறிப்பாக பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1 கோடி 14 இலட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1 இலட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள் நகர பேருந்துகளில் சென்றால் கட்டணமில்லா சலுகை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 7 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழ்நாடு முதலமைச்சர் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கின்ற சுமார் 18 இலட்சம் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. வருகின்ற 15 ஆம் தேதி அன்று அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் துவக்கி வைக்க இருக்கிறார். 

We are going to build lakhs of houses Minister Chakrapani

புதுமைப் பெண் திட்டத்தினை ஏற்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறார். இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தினை ஏற்படுத்தி மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டினை குடிசை இல்லா மாநிலமாக உருவாக்க கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காவேரியிலிருந்து குடிநீர் கொண்டு வரும் பணிகள், துரிதமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு  முகாம்கள் 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் 11.07.2024 முதல் 23.08.2024  வரை 23 நாட்கள்  68 முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை  நடைபெறவுள்ளது. அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மருத்துவத்துறை, மாவட்ட தொழில் மையம், பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, பொது மேலாளர் (முன்னோடி வங்கி), மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 22 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட உள்ளது.

இவ்வாறு பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும். அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில், மக்களுக்காகவே இந்த அரசு என்ற வகையில் செயல்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத திட்டங்களை செயல்படுத்தி, பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்” என்று கூறினார்.