/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus_44.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் மேற்கூரை வழியே மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அண்ணாபேருந்து நிலையத்தில் இருந்து இன்று (19-11-23) காலை 11 மணி அளவில் அத்திமரப்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று மழை பெய்ததால் பேருந்து மேற்கூரை வழியே பேருந்தின் உள்ளே மழை நீர் பெய்தது.
இதனால், அவதியடைந்த பயணிகள் பலர் மழையில் நனைந்தபடியும், பேருந்தின் ஓரமாக நின்று கொண்டும் பயணம் செய்தனர். இன்னும் சில பயணிகள் பேருந்திற்குள் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்தனர். இதில் அவதியடைந்த மக்கள் கூறியதாவது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருக்கிறது. இதனால், அந்த பேருந்திற்கு பதில் புதிய பேருந்துகளை இயக்கவேண்டும்’ என்று கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)