Skip to main content

முதல்வருக்கும், நடிகர் சூர்யாவுக்கும் கொட்டடித்து நன்றி கூறிய பழங்குடியின மக்கள்! (படங்கள்)

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

இந்து ஆதியன் இனமக்களுக்கு சலுகைகளை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கும், ‘ஜெய் பீம்’ திரைப்பட நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொட்டடித்து நன்றி தெரிவித்தனர் நாகை மாவட்ட பழங்குடியின மக்கள். இருளர் இனம் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த பிரச்சனையை ஆழமாகப் பேசி, உலக அளவில் விவாதிக்கச் செய்யும்படி வெளியானது ‘ஜெய் பீம்’ திரைப்படம். பலதரபட்ட மக்களையும் பேசவைத்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்து கலங்கிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வருகின்ற 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசிகள் அனைத்தும் கிடைக்கவும், அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சாதிச் சான்றிதழை வழங்கிடவும் உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழலில், பழங்குடியின மக்களின் வலிகளை உணர்ந்து, அடிப்படை தேவைகள் கிடைக்க அதிரடியாக உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை  நாகை அவுரி திடலில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

வழக்கமாக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்களின் போராட்டம், ஆர்ப்பாட்டம், பாராட்டு விழாக்களைக் கண்ட அவுரித்திடல் பழங்குடி மக்களை சுமந்திருந்தது. முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா கூட்டத்தில், செல்லூர், பொறக்குடி, நீலப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் தவறாமல் வந்திருந்தனர். விழாவில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொட்டடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அங்கிருந்தவர்கள் எல்லோரும் அம்பேத்கர், தமிழ்நாடு முதல்வர், நடிகர் சூர்யா ஆகியோரின் பதாகைகளை ஆர்வத்தோடு தூக்கிப்பிடித்து பழங்குடியின மக்களின் உரிமைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவந்த நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.