Skip to main content

“என் பயிரை நாசம் செய்யுது, அதான் விஷம் வச்சேன்..” -  விவசாயி பதிலால் அதிர்ந்த பொதுமக்கள்! 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

People shocked by the farmer's confession

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை அடிவாரத்திற்கு அருகேயுள்ளது இருணாப்பட்டு கிராமம். இந்த கிராமத்தின் வயல்களுக்கு மலையிலிருந்தும், அப்பகுதியில் உள்ள காப்புக்காட்டு பகுதியில் இருந்தும் வரும் பறவைகள், காட்டு விலங்குகள் உணவு பயிர்களை நாசம் செய்துவிட்டு சென்றுவிடும். இந்த மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்களும் உள்ளன. அவைகளும் அடிக்கடி விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு வந்து தன் பசிக்காக பயிர்களை நாசம் செய்துவிட்டு செல்லும்.

 

அதே கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான மேகநாதன் என்பருக்கு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல், மணிலா என பயிர் செய்துவருவார். தற்போது நெல் பயிர் செய்துள்ளாராம். அதனை மயில்கள் உட்பட பறவைகள் வந்து சாப்பிட்டுவிட்டு செல்வதால் பயிர்கள் நாசமாவதை தடுக்க பூச்சி மருந்து வாங்கிவந்து உணவு தானியத்தில் கலந்து வயல் பகுதியில் வைத்துள்ளார். ஜனவரி 28ஆம் தேதி மதியம் விஷம் கலந்து வைத்திருந்த உணவு தானியத்தை சாப்பிட்ட மயில்கள் சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்துள்ளன.

 

இதனைப்பார்த்த அப்பகுதியிலிருந்த மற்ற விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுக்குறித்து மேகநாதனிடம் கேள்வி எழுப்பியவர்களிடம் ‘என் பயிரை நாசம் செய்யுது, அதான் விஷம் வச்சேன், சாவட்டும்’ என பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியானவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் இருந்து வந்த வனத்துறை காவலர்கள்,  இறந்த மயில்களை கைப்பற்றி பிரதேப் பரிசோதனை செய்தனர். அதோடு விஷம் வைத்த மேகநாதனை கைது செய்தனர்.

 

இதுக்குறித்து திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாக் சதிஷ் கிரிஜலா, “மயில் நம் நாட்டின் தேசியப்பறவை, அதை கொல்வது சட்டப்படி குற்றம். அதற்கு அதிகபட்ச தண்டனை உண்டு” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.