புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவத்தில் ஒரு வருடம் கடந்தும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய தாமதமாகும் நிலையில் தொடர்ந்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இறையூர் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்த நிலையில் வேங்கைவயல் கிராம மக்களும் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். மற்றொரு பக்கம் எந்த வேட்பாளரும் வாக்கு கேட்டு செல்லவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வாக்குச் சேகரிக்கச் சென்ற நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் விருவிருப்பாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் வேங்கைவயல் அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் காலை முதல் வாக்குப் பதிவு நடக்கவில்லை. 561 வாக்குகள் உள்ள இந்த வாக்குச் சாவடியில் 12.30 மணி வரை 6 வாக்குகள் மட்டும் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. வேங்கைவயல் கிராம மக்கள் முற்றிலும் புறக்கணித்துள்ளனர். இதனால் வாக்குச் சாவடி வெறிக்சோடிக் கிடக்கிறது.