Skip to main content

“மாநிலத்தின் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

Peace is the basis for the development of the state says CM Stalin

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (3.10.2023) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

 

இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது முதலாவது இலக்கு. இரண்டாவது பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிட கூடியவர்களுக்கு இடமளித்து விடக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்தோடு இத்தகைய சக்திகள் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். இது நமது எதிர்கால தலைமுறறையை சீரழிக்கிறது. இது சம்பந்தமாக குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து விபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

 

இம்மாநாட்டில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசுத் துறைச் செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் மாநாட்டில் உரையாற்றிய காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், “மாநிலத்தின் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்களை முன்பே தடுக்கவும், அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதிசெய்யவும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள் முதல் நாள் மாநாட்டில் அறிவுறுத்தினேன். சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பாக அலுவலர்கள் கூறிய ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் எதிரொலி; 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு  

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

michaung Echo; Public holiday notification for 4 districts

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது.  இதனால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிதீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள 98 சதவீத ஏரிகள் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. நாளை முற்பகல் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (05/12/2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

90 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம்- திருவள்ளூருக்கு  'ரெட் அலர்ட்'

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

'Red Alert' for Tiruvallur

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிதீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்