Skip to main content

நாகை - காங்கேசன் இடையே பயணிகள் கப்பல் சேவை

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Passenger ferry service between Nagai to Kangeson

 

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது.

 

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை தமிழக பொதுப்பணிகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். 150 பயணிகள் பயணம் செய்யும் வகையில் விரைவு பயணியர் கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கப்பல் இயக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு கடல்சார் வாரியம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் இந்த கப்பல் போத்துகுவரத்தை துவங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

 

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை, மற்றும் வெளியுறவுத்துறை மூலம் கப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்காக நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணிகள் முனையம் அமைப்பது போன்ற பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

 

இந்த கப்பல் போக்குவரத்து சேவை வெளிநாடு செல்லும் கப்பல் பயணம் என்பதால், மத்திய அரசின் தொழில்துறை, பாதுகாப்பு துறை மற்றும் சிஐஎஸ்எஃப் மூலம் கையாள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. மேலும் நாகை துறைமுகத்தில் பயணிகளுக்காக அனைத்து வசதிகளும் உள்ள கப்பல் முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

3.5 கிலோ தங்கம் கடத்தல்; சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

3.5 kg of gold issue  Customs officers are in action
மாதிரிப்படம்

 

இலங்கையிலிருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

இலங்கையிலிருந்து கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் இராமேஸ்வரம் மாவட்டம் பாம்பன் அடுத்துள்ள முந்தல் முனை கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு நாட்டுப்படகு வந்துள்ளது. இதனைக் கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அந்த படகை சுற்றி வளைத்து தீவிரமாகச் சோதனை செய்தனர். அதே சமயம் அந்த படகில் வந்த 4 பேரும் கடலில் குதித்து தப்பித்து ஓடிவிட்டனர். இதனையடுத்து படகில் 3.5 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

மேலும் தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில், இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடியே 30 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

இலங்கைத் தமிழர்கள் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

7 Sri Lankan Tamils have taken refuge in Tamil Nadu
மாதிரிப்படம்

 

இலங்கைத் தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

 

இலங்கையில் நிகழும் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 7 பேர் அகதிகளாக யாழ்ப்பாணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்துள்ளனர். யாழ்ப்பாணம் மன்னார் துறைமுகத்தில் இருந்து வந்த இவர்கள் 7 பேரையும் கடலோர காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விசாரணைக்குப் பிறகு 7 இலங்கைத் தமிழர்களும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி தமிழகத்திற்கு 100க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்