Published on 02/11/2020 | Edited on 02/11/2020
![Papanasam announcement as a vacant constituency](http://image.nakkheeran.in/cdn/farfuture/c9Sh6UwDziHh4Zkqsyv-GdIC6GeWyylbkpg1vWcpV3Y/1604324333/sites/default/files/inline-images/ZcvZFSFSFSFSF.jpg)
கரோனா பாதிப்பால் சிகிச்சைபெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72) கடந்த அக்.31 ஆம் தேதி காலமானார். அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். நேற்று அவரது உடல், அவரது சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவைத் தொடர்ந்து தற்பொழுது உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவையொட்டி அவர் எம்.எல்.ஏவாக இருந்த பாபநாசம் தொகுதி காலியானதாக தற்பொழுது சபாநாயகர் அறிவித்துள்ளார்.