/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4146.jpg)
'பழனி கோவில் வீதிகள் வர்த்தகத்திற்கு இல்லை' என உயர்நீதிமன்றமதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள மிக பிரசித்திபெற்றபழனி முருகன் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் பல்வேறு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி மலை கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். எனவே கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. சுமார் முப்பது ஆண்டுகளாக கோவிலுக்கு சொந்தமான இடங்களை 160 கடைகள் ஆக்கிரமித்து இருந்தது. அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார். இந்த வழக்கில் 'முழுவதும் ஆக்கிரமிப்பு இல்லாத அளவிற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்க கூடாது. பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகள் இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. அதேபோல் பிளாஸ்டிக் மற்றும் குட்கா விற்பனைக்கு முழுமையாக அங்கு தடை விதிக்க வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)