பழனி தண்டாயுதபாணி கோவிலில் மூலவர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜா ஜாமீன் கோரிய வழக்கில் அரசு தரப்பில் காலஅவகாசம் கோரியதால் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையா மற்றும் அறநிலையத்துறை ஆணையர் ராஜா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில் "திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் மூலவர் சிலை விவகாரம் தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் மார்ச் 26ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டேன்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணாமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துந்தேன். இதைதொடர்ந்து கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றங்களில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முத்தையா ஸ்தபதி தனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட கோரி, தற்போது உயர்நீதிமன்றம் மதுரைகிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்து அறநிலையதுறை இணை ஆணையர் ராஜாவும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுதரப்பில் பதிலளிக்க காலஅவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை நாளை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.