Paddy harvester vehicle collided with bike, two passed away and one in intensive care ...

Advertisment

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பத்ராசலம் பகுதியைச் சேர்ந்த ஹரி முல்லா மகன் அப்துல் ரகுமான் (வயது 31),அதே பகுதியைச் சேர்ந்த மாபு பாஷா,பீருபாஷா ஆகிய மூவரும் கள்ளக்குறிச்சி பகுதியில் கட்டுமானப் பணிக்காக வேலைக்கு வந்துள்ளனர். அவர்கள் மூவரும் நேற்று (14.02.2021) அதிகாலை கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் ஓகே சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போதுசங்கராபுரம் பகுதியில் இருந்து கள்ளகுறிச்சி நோக்கி நெல் அறுவடை இயந்திரம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த இயந்திரம் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதியது. இதில் மாபு பாஷா, பீரு பாஷாஆகிய இருவரும் நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் அப்துல் ரகுமானுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து தொடர்பாக நெல் அறுவடை இயந்திரத்தை ஓட்டிவந்த சங்கராபுரம் அருகிலுள்ள பொய்க்குணம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.