Skip to main content

சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பயணம்; ஒடிசா விரையும் அமைச்சர் தலைமையிலான குழு

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Over 150 people from Chennai traveled; A committee headed by Odisha Vrayyum Minister

 

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

தற்போதைய நிலவரப்படி 50 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் 044-25330952, 044-25330953, 25354771 என்கிற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் 132 பேர் இதுவரை காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் ஒடிசா முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்து வகையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்திருந்தார். அதன்படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு தற்போது ஒடிசா செல்ல இருக்கின்றனர். அமைச்சருடன் வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த், போக்குவரத்து துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி, அர்ச்சனா ஐஏஎஸ் ஆகியோரும் ஒடிசா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' - தமிழக முதல்வர் அறிவுறுத்தல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

storm warning; Chief Minister's insistence

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். கனமழையால் மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க அரசு துறைகள் ஒருங்கிணைந்து தயார் நிலையில் உள்ளது. உணவு, உடை, மருத்துவம் ஆகிய அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் நிவாரணப் பணிகளை செய்திட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் நின்று மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஓடும் ரயிலில் திருமணம்; வைரலாகும் வீடியோ

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 Marriage on a Running Train; A viral video

 

அண்மையாகவே திருமணம் செய்த கையோடு தேர்வு எழுதுவது அல்லது போராட்ட நிகழ்வுகளுக்கு திருமணம் முடிந்த கையோடு செல்வது என சில புதுமண தம்பதிகள் எடுக்கும் அதிரடி முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாவதும், அந்த காட்சிகள் இணையவாசிகள் மத்தியில் ஆதரவுகளை பெறுவதும், எதிர்ப்புகளையும் பெறுவதும் நிகழ்ந்து வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் ஓடும் ரயிலில், பயணிகள் மத்தியில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிற்கு மாலையிட்டு, தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அசன்சோல் ரயிலில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்