Skip to main content

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு'-பேனர் வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்

 

 An OPS supporter holding a banner

 

அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி தரப்பு ஆயத்தமாகி வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அனைவரும் ஒன்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

 

தேவைப்பட்டால் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை சந்திக்க இருப்பதாக ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 'ஒற்றுமையே வலிமை' என்ற வாசகத்துடன் ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் படங்கள் கொண்ட பேனர் ஓபிஎஸ்-ன் சொந்த தொகுதியான தேனியில் வைக்கப்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டம் தென்கரை மேல்மங்கலத்தைச் சேர்ந்த முத்து என்ற ஓபிஎஸ் ஆதரவாளர் ஜெயலலிதா, ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வ. தினகரன் ஆகியோர் உருவ படங்களைக் கொண்ட பேனரை வைத்து அதில் 'ஒற்றுமையே வலிமை; ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; கழகத் தொண்டர்களே  வாருங்கள் ஒன்றிணைவோம்' என்ற வாசகங்கள் கொண்ட பேனரை வைத்துள்ளார்.

 

இதை படிக்காம போயிடாதீங்க !