Skip to main content

''நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட''- தேர்தல் பிரச்சாரத்தில் ஓபிஎஸ் காமெடி    

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை  ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,


அதிமுக ஆட்சியில் முன்பை விட 8 மடங்கு வீடுகள் கட்டித் தரப் பட்டிருக்கிறது. அதையெடுத்து தொழிலிலும் முன்னேற்றம் பெற்று வருகிறோம். சட்டத்துறை அமைச்சராக சிவி சண்முகம் உள்ள நிலையில் 2018- 2019 இந்த இரண்டு வருடத்தில் எட்டு சட்டக் கல்லூரிகளை நிறுவிய வரலாறு இதுவரை தமிழகத்தில் இல்லை, எந்த மாநிலத்திலும் இல்லை. இது ஒரு சாதனை அல்லவா...  ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் உயர்கல்வித் துறையில் 66 கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடி, வெட்னரி காலேஜ். இப்படி கல்லூரிகளுக்கு ஜெயலலிதா ஆற்றிய பணியில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த சாதனையை செய்ய வில்லை. இவைகள் எல்லாம் சாதனைகள் இல்லையா? 

 

ops

 

அவருக்கு ஒரே ஆசை முதல்வராக வேண்டும் என்ற ஆசை, எந்த காலத்திலாவது ஆக முடியுமா? ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியுமா... முடியவே முடியாது. அவருக்கு அந்த யோகம் இல்லை என பேசினார்.

அப்போது பன்னீர்செல்வத்தின் காதில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் முணுமுணுக்க.. திரும்பவும் மக்களைப் பார்த்த ஓபிஎஸ் நமது சட்டத்துறை அமைச்சர் சொல்கிறார் ஒரு படத்தில் வடிவேலுவை பார்த்துச் சொல்வார்கள் ''நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட'' என்று அதுமாதிரி ஸ்டாலின் அவர்களே நீங்க அதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீர்கள். மக்கள் எந்த நேரத்திலும் உங்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

ஏன் மக்கள் உங்களுக்கு இடைத்தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றதேர்தலாக இருந்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதற்கு நீங்கள் கடந்த காலங்களில் ஆண்ட பொழுது தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளுக்கு ஊறு பங்கம் வருகின்ற பொழுது அதை காப்பாற்றி கொண்டுவரக்கூடிய இடத்தில், ஆளுகிற இடத்தில் இருந்த பொழுது ஜீவாதார உரிமைகளை காப்பாற்ற வில்லை என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாமகவிற்குக் கடைசி தேர்தல்; சீமான் கீழ்பாக்கத்திற்குப் போகவேண்டும்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
nn

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடைத்தேர்தல் வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

'பணம் கொடுத்து தான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'திராவிட முன்னேற்றக் கழகம் பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. பாமக தான் கிட்டத்தட்ட 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பாமகவை பொறுத்தவரை நான் இந்த தேர்தல் ஆரம்பிக்கும் போதே சொன்னேன். இதுதான் அவர்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் என்று. ஏனென்றால் அவர்கள் கூட சேர்ந்து இருப்பவர்கள் மிகவும் மோசமானவர்கள், வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அது மட்டுமல்ல ராமதாசை பொறுத்தவரை நாங்கள் இனிமேல் மரம் வெட்ட மாட்டோம் என்று சொன்னால் தான் தமிழ்நாட்டில் டெபாசிட்டே வாங்க முடியும்'' என்றார்.

தொடர்ந்து சீமான் குறித்து கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் முயன்றபோதே, 'சீமானுடைய கருத்துகள் எல்லாம் நான் கருத்தாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவரை பொறுத்தவரை ஒன்று குற்றாலத்திற்கு செல்ல வேண்டும். அல்லது கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு நாள் ஒன்று பேசுகின்றார் மறுநாள் இன்னொன்றை பேசுகின்றார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு மேலே கொஞ்சம் குழம்பி இருக்கிறது என்று நினைக்கின்றேன்.

அதிமுகவின் ஓட்டு திமுகவிற்கு சென்று உள்ளதா? என்ற கேள்விக்கு 'எல்லா தமிழர்களின் ஓட்டும் திமுகவிற்கு சென்று இருக்கிறது' என்றார்.

Next Story

விக்கிரவாண்டியில் சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
 11 people admitted to hospital after drinking liquor in Vikravandi

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டியில் விறுவிறு என வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட டி.கொசபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கத்திக்குத்து சம்பவத்தால் வாக்குச்சாவடி பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்நிலையில் விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் வாந்தி, மயக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வந்த சக்திவேல் என்பவர் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பூரிகுடிசை என்ற கிராமத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்துள்ளார். அதைக் குடித்த 11 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

nn

வாக்குப்பதிவு நாளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு அங்கு கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரான சக்திவேலை கஞ்சனூர் போலீசார் கைது செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11 பேரும் தற்பொழுது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இன்று உயிரிழப்பு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் பரபரப்பாக இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் சாராயம் குடித்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.