style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வீட்டுவசதித்துறை அமைச்சராகவும், துணைமுதல்வராக இருக்கும் ஓபிஎஸ்க்கு கவர்னருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அடுத்த தலைமைசசெயலாளராக வர நினைக்கும்கவர்னரின் செயலாளரானராஜகோபால் இப்பொழுதே ஐஏஎஸ் அதிகாரிகளை தன் வசம் வைத்திருக்கிறார். வீட்டுவசதித்துறை செயலாளராக இருக்கும் கிருஷ்ணனையும் தனது பிடிக்குள் வைத்திருக்கிறார் கவர்னரின் செயலாளரானராஜகோபால்.
கிருஷ்ணன் ராஜகோபாலின் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கிருஷ்ணன் ராஜகோபால் சொல்வதை கேட்கிறார். ராஜகோபால் ஓபிஎஸ் கொண்டுவரும் வீட்டுவசதித்துறைவிவகாரங்களுக்கு, புதிய லே-அவுட்களுக்குஅனுமதி கொடுக்காதீர்கள் என கிருஷ்ணனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கிருஷ்ணன் ஓபிஎஸ் கொண்டுவரும் புதியலே-அவுட்கள்மற்றும் வீட்டுவசதித்துறைக்கு உட்பட்ட விவகாரங்கள் மற்றும் அரசாங்க வீடு ஒதுக்கீடு ஆகியவற்றை ஏற்க மறுக்கிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இப்படி ஓபிஎஸ் கொண்டுவரும் அனைத்து சிபாரிசுகளையும் கிருஷ்ணன் நிராகரிக்கிறார். இதனால் கிருஷ்ணனுக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. இந்தநிலையில்பிரச்சனையை எடப்பாடியிடம் கொண்டு சென்றிருக்கிறார் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடியோஇவையெல்லாம் கவர்னரின் செயலாளரான ராஜகோபாலனின்திருவிளையாடல்கள் எனவேதடுக்க முடியாது என கழண்டுவிட்டார்.
இதனால் ராஜகோபாலுக்கும் ஓபிஎஸ்க்கும்இடையே மோதல் முற்றியுள்ளது.ராஜகோபாலுக்கும், ஓபிஎஸ்க்கும், வீட்டுவசதித்துறை செயலாளர் கிருஷ்ணனுக்கும் இடையே நடக்கும் இந்தமுக்கோண மோதலில் கவர்னருடைய அந்தரங்க விஷயங்களை அறிந்தவர் ராஜகோபால் என்பதால் கவர்னர் ராஜகோபாலை ஆதரிக்கிறார். கிருஷ்ணனை எனது துறையில் இருந்து நீக்க வேண்டும் என கொடிபிடிக்கிறார் ஓபிஎஸ். அதேபோல்கவர்னரின் செயலாளரான ராஜகோபாலோகிருஷ்ணன் அதே துறையில்தான் நீடிக்க வேண்டுமென ஓபிஎஸ் உடன் மல்லுக்கட்டுகிறார்.
ராஜகோபால், கவர்னர்,கிருஷ்ணன், ஓபிஎஸ் எனஇப்படி நடக்கும் மோதல் அடுத்து எங்கு போய் முடியும் என தெரியவில்லை. ராஜகோபால், கவர்னர், கிருஷ்ணன் இந்த மூவரையும்எதிர்த்து எடப்பாடியிடம் கடுமையாக பேசியிருக்கிறார் ஓபிஎஸ்.
எடப்பாடியும் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என கைவிரித்திருக்கிறார். இந்த மோதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில்பரபரப்பாக பேசப்படுகிறது.