முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கடந்த வருடம் ஜூன் 26ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் பலமுறை மனுத்தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து இது தொடர்பாக சிவசங்கர் பாபா தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் இருப்பதாலும், ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பிருப்பதாகவும், இதனால் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.