Published on 10/06/2022 | Edited on 10/06/2022

கந்துவட்டி கொடுமைத் தொடர்பாக, வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். மேலும், 'ஆப்ரேஷன் கந்துவட்டி' நடவடிக்கை மூலம் சட்ட அறிவுரைப் பெற்று வழக்குகளை பதியுமாறு மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் கையெழுத்திட்டு நிரப்பப்படாத பத்திரங்கள், காசோலைகள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஐந்து பேர் இது தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர்.