opening date of schools across Tamil Nadu has changed

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருந்தது. அதே சமயம், வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்வது கடும் சிரமம் என்று ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஜூன் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.