திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பர் 1- ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி, பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகளைத் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை; மறுபரிசீலனையும் இல்லை. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் போது, ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிய முடியாது என்பதால் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு, அவர்களுக்குப் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.