Published on 31/10/2020 | Edited on 31/10/2020

கோவை சீரநாயக்கன் பாளையம் கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் மதன் குமார்.
கரோனா காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதன்மூலம், பெருமளவிளான பணத்தை இழந்துள்ளார். இதனால், மதுபோதைக்கு ஆளாகியிருக்கிறார். எப்போதும் செல்ஃபோனை நோண்டிக்கொண்டே இருப்பதைப் பெற்றோரும், உறவினர்களும் கண்டித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், கடனாளி ஆனதை அறிந்து மதன்குமாரை குடும்பத்தார் திட்டியிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த மதன்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கோவையை அதிர வைத்திருக்கிறது.