
பா.ம.க.வின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடைச் செய்வதற்க்கான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 14 மாதங்களில் 29 பேர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கின்றனர். அவை இனி தடுக்கப்படும். அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் வரவேற்கத்தக்கது.
இம்மாத இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத்தை நிறைவேற்றவும், அதை நீதிமன்றங்களில் பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.