Online cheating ... Cyber Crime Action

திருச்சியில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் மோசடி அரங்கேறியுள்ளது. அதன்படி திருச்சியைச் சேர்ந்த தமிழ்மணிஎன்பவருக்கு அலைபேசியில் மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டுள்ளார். அதில் பேசிய நபர், LIC Bonus Amount வந்திருப்பதாகவும், அதனைப் பெற்றுத்தருவதற்கு மனுதாரரின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளார். இதனை உண்மையென நம்பி தனது வங்கி விவரங்களைக் கூறியுள்ளார். உடனே அந்த வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 46,999/- எடுத்துள்ளனர்.

Advertisment

அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விசாரணை செய்ததும், தமிழ்மணியின் பணம் மீட்டுத்தரப்பட்டது. மேலும், கோமதி என்பவர் Flipkart-ல் தொலைகாட்சி ஆர்டர் செய்துள்ளார்.

Advertisment

அதில் order failed என வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் Flipkart Customer Care எண்ணை தொடர்புகொண்டபோது எதிர்முனையில் பேசியவர் Any Desk app-l Install செய்யக் கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பிஅந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1,00,465/- எடுத்துவிட்டதாகவும், எனவே தான் இழந்த பணத்தை மீட்டுதரக் கோரி Online மூலம் NCRP-ல் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து விசாரணை செய்து கோமதியின் பணம் முழுமையாக மீட்டுதரப்பட்டது.