வேலூரில் உள்ள புகழ்பெற்ற கோட்டையின் சுற்றுச்சுவர் ஒருபுறத்தில் தீ எரிந்து கொண்டிருக்க மறுபுறத்தில் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் காதலர்கள் சில்மிஷங்களுடன் காதல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பதினாறாம் நூற்றாண்டின் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட வேலூர் கோட்டை மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. புராதன சின்னமாக விளங்கும் இந்த கோட்டையின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத சூழலில் தீயை அணைக்க தொல்லியல்துறை அதிகாரிகள் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து தீ எரிந்து வருகிறது.
இந்த தீவிபத்துக்கு யார் காரணம் என்பது பற்றி வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். கோட்டையின் ஒரு பகுதி எரிந்துகொண்டிருக்க கோட்டையின் மேல் புறத்தில் காதல் ஜோடி அமர்ந்திருந்து கொண்டு கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஆபத்தான சூழலில் அமர்ந்து காதல் விளையாட்டில் ஈடுபட்டு வரும் காதல் ஜோடிகளை காவல்துறையினர் எச்சரிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.