Skip to main content

மாத்திரை சாப்பிடுவதில் போட்டி; மாணவி உயிரிழப்பு - மூவர் கவலைக்கிடம் 

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

One schoolgirl  passed away and three others are  critical condition ooty

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பாக ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உதகை காந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் உருது நகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. அப்போது மாணவ, மாணவிகளிடையே யார் அதிக மாத்திரை சாப்பிடுவது என போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எட்டாம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளும், 7 மற்றும் ஆறாம்  வகுப்பு படிக்கும் இரு மாணவர்களும் ஊட்டச்சத்து மாத்திரையை சக்லேட் சாப்பிடுவதை போன்று கடித்து சாப்பிட்டுள்ளனர். 

 

இதனால் மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் 30 க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் 6 பேரும் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை உதகை மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் மாணவி 4 பேரின் உடல்நிலை மோசமானதால் கோவை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதில் ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடலை நிலை மிகவும் மோசமானதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வந்தனர். ஆனால் மாணவி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளின் உடல நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே பள்ளியின் தலைமையாசிரியர் முகமது அமீன், மாத்திரை விநியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று ஆசிரியை கலைவாணி பள்ளிக்கு வரவில்லை, விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதலில் தலைகாட்டிய சிறுத்தை; உடனே வந்த கரடி; வைரலாகும் வீடியோ

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
The leopard that first showed its head; The bear that came immediately; A viral video

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. நடமாடும் சிறுத்தையின் படத்தை வனத்துறை வெளியிட்டுள்ளது. 8 மோப்ப நாய்கள் உதவியுடன் சிறுத்தையை பிடிக்கும் பணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதேபோல் ஊட்டியில் குடியிருப்பு பகுதி ஒன்றில் சிறுத்தை ஒன்று நடமாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ காட்சியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்ல, அடுத்த நொடியே கரடி ஒன்றும் அதே குடியிருப்பு பகுதிக்கு வந்தது. இந்த காட்சிகள் இணையத்தில்  வைரலாக பரவி வருகிறது.

Next Story

உதகையில் தள்ளுமுள்ளு; எஸ்.பி. வாகனத்தை சேதப்படுத்திய அதிமுகவினர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
police and AIADMK pushed back when they filed their nomination papers in Utagai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர் எல். முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் இருவரும் இன்று ஒரே நாளில் உதகையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முன்பாக எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய 11 மணி முதல் 12 மணி வரை நேரம் ஒதுக்கித் தர கேட்டிருந்தார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

அதேபோன்று அதிமுக வேட்பாளருக்கும் அதற்கு அடுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எல். முருகனும், பாஜக நிர்வாகிகளும் கோவில்களுக்குச் சென்றுவிட்டு  தாமதமாக 12 மணிக்கு உதகை ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளனர். இதனிடையே எல்.முருகன் தாமதமாக வந்ததால் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கில் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்களும் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

police and AIADMK pushed back when they filed their nomination papers in Utagai

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் தாமதமாக வந்து எங்கள் நேரத்தில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்று அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனைத் தொடர்ந்து  பாஜக - அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே பாஜவினர் பேரணி செல்வதால் சற்று நின்று செல்லுமாறு காவல்துறையினர் அதிமுகவினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதிமுகவினர் அதனைக் கேட்காமல் போலீசாரின் தடுப்புகளை மீறிச் சென்றதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த காவல் கண்காணிப்பாளர் வாகனத்தை மறித்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.