
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 19 ஆம் தேதி பெண் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்வதற்குக் கொள்ளையடித்த மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(35). கடந்த 19 ஆம் தேதி இரவு, தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் ராஜேஸ்வரி சமோசா வியாபாரம் செய்துவிட்டு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில்பயணிகளுடன் இறங்கியபோது மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் விசாரித்து வந்தனர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவு மூலம் தப்பியோடிய மர்ம நபரைக் காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளியே ஆள் வைத்து அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நாகவள்ளி, ஜெகதீசன், சூர்யா, ஜான்சன், சக்திவேல் ஆகியோரை போலீசார் விசாரித்ததில், நாகவள்ளி சக்திவேல் என்ற இளைஞருடன் முறையற்ற உறவில் இருந்து வந்ததை சகோதரி ராஜேஸ்வரி கண்டித்து வந்ததால் நாகவள்ளி ஆள் வைத்து ராஜேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது.
கொலை செய்துவிட்டு அடுத்த நாள் அக்கா ராஜேஸ்வரியின் இறுதி ஊர்வலத்தில் நாகவள்ளி குத்தாட்டம் போட்ட நிலையில் கொலைக்கு காரணமான அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாகக் கொலை செய்வதற்காகவே வானூர் அருகே இவர்கள் ஐந்து பேரும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது ஐந்து பேரும் வானூர் அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)