Omni bus accident near Puduchampally; rescue operation intensified

மேட்டூர் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முழு பேருந்தும் எரிந்து நாசமானது. பேருந்தில் இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பித்த சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கோயம்புத்தூரிலிருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று43 பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தது.அப்பொழுது மேட்டூர் அடுத்துள்ள சாம்பள்ளி பகுதியில் வந்தபோது பேருந்தின்முன் பகுதியில் கரும்புகை வெளியானது. இதனைக்கண்ட ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளை வெளியேறும்படி அறிவுறுத்தினார். உடனடியாகப் பயணிகள் கீழே இறங்கத் தொடங்கினர்.அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்புறம் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

Advertisment

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கருமலைக்கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும்பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது. பேருந்தில் இருந்த 43 பயணிகளும் அவசர வழி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதித்து உயிர் பிழைத்தனர். இந்த விபத்தில் தீயில் சிக்கி 6 பெண்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மேட்டூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆம்னி பேருந்து எரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் சாம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.