old women age burial coimbatore

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கம்மாள். 102 வயதான இவர், அந்த கிராமத்திலும், சுற்று வட்டாரங்களிலும் மூத்தவராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று வயது மூப்பின் காரணமாக, ரங்கம்மாள் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து ரங்கம்மாளின் உறவினர்கள், அவரது உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்யக் கொண்டு சென்றனர்.

Advertisment

அந்த சமயம் பார்த்து, ரங்கம்மாளின் உடலை அடக்கம் செய்வதற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, ரங்கம்மாளின் உடலைச் சாலையின் நடுவில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Advertisment

ஆனால், ரங்கம்மாளின் உறவினர்கள், ''நாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயானத்தை, தற்போது பாலம் கட்டி சுருக்கி விட்டனர். அங்குப் புதைப்பதற்கு இடமில்லை. எனவே இங்குதான் புதைப்போம் எனத் தெரிவித்தனர். இதற்கு, எதிர் தரப்பினர் மறுப்பு தெரிவித்ததால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை இந்த போராட்டம் நீடித்தது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும், மயானத்துக்கு தேவையான இடத்தை, தமிழக அரசே தருவதாக, போலீசார் வாக்குறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து, ரங்கம்மாள் உடலை ஏற்கனவே பயன்படுத்திவந்த மயானத்திலேயே புதைப்பது என, முடிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கோவை மாவட்டம் முழுவதும் பிரட்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment