Published on 15/12/2023 | Edited on 15/12/2023
![Old woman passed away near Bhavanisagar](http://image.nakkheeran.in/cdn/farfuture/JP_co16G7eNOKde5te93ig1cwnSpCM6PqiyiW0uZJYc/1702618618/sites/default/files/inline-images/1002_135.jpg)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உத்தண்டியூர், அக்கரை தாத்தா பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரம்மாள்(69). இவர் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் மாரம்மாள் வீட்டில் கேஸ் ஸ்டவ்வில் டீ வைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது. இதனால் மாரம்மாள் உடல் கருகி அலறினார்.
அவரது அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மாரம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.