/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_135.jpg)
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வெள்ளோடு கவுண்டச்சிபாளையம் மாகாளி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அம்மாசை (83). இவரது கணவர் குழந்தைசாமி. இவர்களது மகள் ஆனந்தாயி. சம்பவத்தன்று காலை அம்மாசை தனது மகளுடன் அந்தப் பகுதியில் உள்ள புளியமரத்து தோப்பிற்கு தென்னை பட்டை எடுப்பதற்காகச் சென்றார். தென்னை பட்டை எடுத்தபோது அதிலிருந்த தேனிக்கள் எதிர்பாராத விதமாக மூதாட்டி அம்மாசையை கொட்டிவிட்டன.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த மூதாட்டி அம்மாசை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)