An old man was arrested for stashing ganja at home

கோவையில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் முதியவர் ஒருவர் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் காவல் துறையினர் குழுவாகச் சென்றுஆய்வுமேற்கொண்டனர். அப்பொழுது மணி என்ற முதியவரின் வீட்டில் ஆய்வு செய்த பொழுது 200 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதனையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த வால்பாறை காவல்துறையினர் முதியவர் மணியை சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.