old man angry with school head master

Advertisment

“படிச்சி என்னத்த கிழிச்சேன்.. பாட்டில் பொறுக்கிக்கிட்டு இருக்கேன்..” என மாணவர் சங்கத்தினருக்கும் ஆசிரியருக்கும் நடந்த வாக்குவாதத்துக்கு மத்தியில், கோணிப்பையுடன் வந்திருந்த முதியவர் ஒருவர் ஆக்ரோஷத்துடன் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் இந்தி மொழி திணிப்பை அமல்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இந்தி திணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, இந்திய மாணவர் சங்க அவிநாசி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில், மாவட்ட நிர்வாகி மோகனப்பிரியா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையறிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன், பள்ளி உதவியாளர் மாதையன் ஆகியோர், மாணவர் சங்க நிர்வாகிகளை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தி எதிர்ப்பு பிளக்ஸ் பேனரையும் பிடுங்கி வீசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாணவர் சங்க ஒன்றிய செயலாளர் மணிகண்டனிடம், பள்ளியில் பணியாற்றும் மாதையன் என்பவர், இந்தி மொழி கற்பது தவறில்லை, மும்மொழி கொள்கை கற்றுக் கொள்ள வேண்டியதுதானே, எனக்கு 30 மொழி தெரியும் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

Advertisment

அப்போது அந்த வழியாக வந்த கோணிப்பையுடன் பாட்டில் பொறுக்கிக்கொண்டு இருந்த முதியவர் ஒருவர் திடீரென ஆக்ரோஷமாக பேசத் தொடங்கினார். படிச்சு என்னத்த கிழிச்சேன்.. நானும் படிச்சவன்தான்.. இப்போ பாட்டில் பொறுக்கிக்கிட்டு இருக்கேன்.. எனக் கோபமாக கூறினார். இதனைஅங்கிருந்தவர் ஒருவர் வீடியோவாகபடம் பிடித்து சமூக வலைதளத்தில்வெளியிட்ட நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.

இதனிடையே பள்ளி தலைமையாசிரியர் கொடுத்த தகவலின் படி அவிநாசி காவல் நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்குவந்தகாவலர்கள், மாணவர் சங்க நிர்வாகிகளை முறையாக காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்த பின்பு ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கூறினார்கள். இதன்பின்பு மாணவர் சங்க நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.