Skip to main content

அக்.2 கிராம சபை கூட்டம்... முதல்வர் தேர்ந்தெடுத்த கிராமம்!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

MK Stalin

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்.31 ஆம் தேதி வரை நீட்டித்து நேற்று தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

 

நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறாத நிலையில், கிராமசபைக் கூட்டங்களை நடத்த அனுமதி வேண்டும் எனப் பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில் வரும் அக்.2 காந்தியடிகள் பிறந்த நாளன்று கிராமசபைக் கூட்டங்களை நடத்தத் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி வரும் அக்.2 மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்