Published on 07/07/2018 | Edited on 07/07/2018

ஒகி புயலில் சிக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். புயல் நேரத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். இது குறித்த ஆவணப்படமாக ‘பெருங்கடல் வேட்டத்து’ என்ற படத்தை இயக்கியுள்ளார் பத்திரிகையாளர் டி.அருள் எழிலன்.
அருள் எழிலன் இயக்கிய இந்த ஆவணப்படத்தை திரையிட அரசு மறைமுக தடை விதித்துள்ளது. இன்று இந்த ஆவணப்படம் ரஷ்யன் கலாச்சார மையத்தில் திரையிடப்பட்ட நிலையில், நாளை சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கவிக்கோ அரங்கத்தில் திரையிட ஏற்கனவே அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், திடிரென இன்று, காவல்துறையிடம் அனுமதி பெற்று வாருங்கள் என்று அரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. காவல்துறையினரோ படத்தை முதலில் தங்களுக்கு திரையிட்டு காட்டினால்தான் அனுமதி அளிக்க முடியும் என்று கூறிவிட்டது.