வேலூர் மாவட்டம், பென்னாத்தூரை சேர்ந்தவர் வினிதா. இவர் சமீபத்தில் கருத்தரித்துள்ளார். இதற்கான பரிசோதனைக்காக பென்னாத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து பதிவு செய்துள்ளார். கர்ப்பம் உறுதியானதும், பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கு மனு செய்துள்ளார்.
முதல் கட்டமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், இரண்டாம் கட்டமாக 4 ஆயிரம், மீதி பணம் மூன்றாவது கட்டமாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்படி முதல் கட்ட நிதியை வாங்கியுள்ளார் வினிதா. இரண்டாம் கட்ட நிதி பென்னாத்தூர் கிராம செவிலியர் லதாவிடம் கேட்டுள்ளார். இரண்டாவது தவணைக்கு பரிந்துரை செய்ய வேண்டுமானால் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் எனக்கேட்டுள்ளார். பணம் கேட்டதோடு அந்த கர்ப்பிணி பெண்ணை மோசமாக பேசியுள்ளார்.
இதில் அதிருப்தியான அந்த பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் இதுபற்றி கூறியுள்ளார். அவர்கள் அதிருப்தியாகி இதுப்பற்றி வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று இதுப்பற்றி புகார் தந்தனர். அவர்கள் போட்டு தந்த திட்டப்படி ஆயிரம் ரூபாய் லஞ்சம் மே 31ந்தேதி வினிதா கொண்டு சென்று அந்த செவிலியர் லதாவிடம் தந்துள்ளார். அவர் பணம் வாங்கி தன்னிடம் வைத்துக்கொண்டதை மறைந்திருந்த பார்த்து உறுதி செய்துக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் அவரை சுற்றி வளைத்து அந்த ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதனால் வேலூர் மாவட்ட அரசு மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.