வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி மற்றும் ஏடிஎம்களில் நின்று மயக்கமடைந்து உயிரிழந்த 126 அப்பாவி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் சிறுபான்மைதுறை மாநில் தலைவர் அஸ்லாம்பாஷா தலைமையில் வாணியம்பாடி நகரில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, பணமதிப்பிழப்பு என்பது ஊழலை ஒழிக்க, கறுப்பு பணத்தை மீட்க, தீவிரவாதத்தை ஒடுக்க எனச்சொன்னார் பிரதமர் மோடி. ஆனால், மக்கள் வங்கி வாசலில் நின்று 126 பேருக்கு மேல் உயிர் விட்டது தான் நடந்தது, மோடி சொன்ன எதுவும் நடக்கவில்லை. இந்திய பொருளாதாரத்தை படுகுழி தோண்டிய நாள் நவம்பர் 7. அதன் மூன்றாம் ஆண்டு துக்க தினம், அதைத்தான் மெழுகு வர்த்தி ஏற்றி அனுசரித்தோம்.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உயர்தர பாதுகாப்பைக் மத்திய அரசு திரும்பப் பெற்றது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.