Skip to main content

''இது சாதாரணமான ஒன்றுதான்... பயப்பட வேண்டாம்'' -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

 "This is a normal thing... don't be afraid" - Minister Subramanian interview!

 

ஒரே நாளில் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருவதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிரம்பி வருவதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று இது தொடர்பாக பல்வேறு விளக்கங்களை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கியுள்ளார். 

 

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலமான அக்டோபர், செப்டம்பர் காலங்களில் ஃப்ளு காய்ச்சல் அதிமாக குழந்தைகளை தாக்கும். இந்நிலையில் இந்த வருடமும் ஃப்ளு காய்ச்சல் அதிமாக குழந்தைகளை தாக்கியுள்ளது. இதன்காரணமாகவே எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்த 300 படுக்கைகளும் நிரம்பியுள்ளதாகவும், கூடுதல் படுக்கை வசதிகளை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

 

 "This is a normal thing... don't be afraid" - Minister Subramanian interview!

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ''பருவ மழைக்கு முன்னாள் குளிர் காற்று ஈரப்பதம் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் பாதிப்பு என்பது சாதாரணமாக உலகம் முழுவதும் வருகின்ற  ஒன்று. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு கரோனா தாக்கம் ஏற்பட்ட நிலையில் இதன் பாதிப்பு குறைந்திருந்தது. ஊரடங்கு, முகவசம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்த பாதிப்பு குறைந்திருந்தது. ஆனால் 2018, 2017 ஆகிய ஆண்டுகளில் இன்றைக்கு வந்திருப்பதை காட்டிலும் அதிகம் இருந்தது. இருந்தாலும் இன்று பயப்பட வேண்டிய சூழல் இல்லை. தற்பொழுது முகவசம் அணிவதிலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதிலும், அடிக்கடி கைகளை கழுவுவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. எனவே இந்தநிலையில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல், தும்மல், இருமல் உள்ளவர்களிடம் இருந்து 2 மீட்டர் அளவிற்கு குழந்தைகளை தள்ளியே வைத்திருப்பது பாதுகாப்பான ஒன்று'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பிரதமர் சொல்வது அதிசயமான ஒன்றாக உள்ளது' - அமைச்சர் மா.சு பேட்டி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
 'What the Prime Minister is saying is something amazing' - Minister Ma.su interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு மீட்பு குறித்த மோதல்கள் பாஜகவிற்கு திமுகவிற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்பொழுது  முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதை எல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.